100 கிராம் வேர்க்கடலையில் 30 கிராம் அளவுக்கு புரதச்சத்துக்கள் இருப்பதால் இது உடல் தசை மற்றும் முடியின் வளர்ச்சியை அதிகரிப்பதோடு உடலுக்கு தேவையான சத்துக்களை அள்ளித் தருகிறது. இதில் வைட்டமின் மற்றும் மினரல் அதிகம் இருப்பதால் உடல் சோர்வு நீக்கி, புத்துணர்ச்சி அளிக்கும். உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரையக்கூடிய தன்மை வேர்கடலையில் உள்ளது. புரதச் சத்து இதில் அதிகம் இருப்பதால் வளரக்கூடிய குழந்தைகளுக்கு இது மிகவும் நல்லது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் காணப்படுவதால், உடலில் ஏற்படக்கூடிய செல் அழிவினை தடுப்பதுடன் செல்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
வைட்டமின் இ மற்றும் புரதம் நிறைந்து காணப்பட கூடிய இந்த வேர்க்கடலை சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கிறது. இதய ஆரோக்கியத்தில் இது முக்கிய பங்கு வகிப்பதுடன் புற்றுநோய் வராமல் தடுப்பதிலும் வேர்க்கடலை மிகச்சிறந்தது. கால்சியம், மக்னீசியம் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வலிமையை அதிகரிப்பதோடு, முடி கொட்டுதல் பிரச்சினையை நீக்கி ஆரோக்கியமான முடி வளரவும் உதவி செய்கிறது.