சேர்ந்து வாழ அழைத்த கள்ளக்காதலி – மயக்க ஊசி போட்டு கொலை செய்த மருத்துவர்!

Default Image

சேர்ந்து வாழ அழைத்த கள்ளக்காதலியை, மயக்க ஊசி போட்டு கொலை செய்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத் எனும் நகரில் வசிக்கும் நான்கு குழந்தைகளுக்கு தாய் தான் 33 வயதுடைய பெண். இந்தப் பெண்ணுக்கும் அப்பகுதியில் கிளினிக் வைத்து நடத்தி வரக்கூடிய இஸ்மாயில் எனும் மருத்துவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது . ஆனால், மருத்துவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி குழந்தைகளும் இருக்கிறது.

ஏற்கனவே, வேறு ஒரு குடும்பம் உள்ளதால் இப்பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் மட்டுமே வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், இந்தப் பெண் மருத்துவரிடம் ஒன்றாக வாசிக்கலாம் என அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார், எனவே இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணை கொலை செய்ய முடிவு செய்து இஸ்மாயில் அவரை சண்டிகருக்கு காரில் அழைத்துச் சென்று ஹோட்டலில் ரூம் போட்டு தங்கி, அவளுடன் சந்தோஷமாக இருந்து விட்டு, அதன் பின் பெண்ணிற்கு மயக்க ஊசி போட்டு டவலால் மூச்சடைத்து கொலை செய்துள்ளார். பின் கொலை செய்யப்பட்ட பெண்ணை குருசேத்திர பகுதியில் வீசி விட்டு மருத்துவர் வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில், தனது மனைவியை காணவில்லை என அவரது கணவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் அப்பெண்ணின் செல்போனை ஆய்வு செய்து பார்த்ததில் இஸ்மாயிலுக்கு அப்பெண்ணுக்குமான தொடர்பை கண்டறிந்துள்ளனர். அதன்பின் இஸ்மாயில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்