“கொரோனா தடுப்பூசி “ரெடி” இன்னும் ஒரு சில வாரத்திற்குள் விநியோகிக்கப்படும்!” – அதிபர் டிரம்ப்
அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்து தாயாராகியுள்ளதாகவும், இன்னும் சில வாரங்களில் நடைமுறைக்கு வரும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தேர்தல் தொடங்க இன்னும் 10 நாட்களுக்கு குறைவாகவே உள்ள நிலையில், அங்கு தேர்தல் விவாதங்கள் சூடுபிடித்தது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.
அமெரிக்காவில் தேர்தல் தொடங்கும் முன்னே, அதிபர் வேட்பாளர்களுக்கிடையே 3 நேருக்கு நேர் விவாதங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி தற்பொழுது நடந்த இறுதிக்கட்ட விவாதம், காரசாரமாக நடைபெற்று வந்தது. இதில் இருவரும் மறிமாறி குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், உலகளவில் அமெரிக்காவில் தான் கொரோனாவால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக அதிபர் டிரம்பிடம் எந்த ஒரு திட்டமும் இல்லையென ஜோ பைடன் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த டிரம்ப், நாம் எந்த ஒரு இருண்ட காலத்திற்குள்ளும் செல்லவில்லை என கூறிய அவர், அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்து தாயாராகியுள்ளதாகவும், இன்னும் சில வாரங்களில் நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளார்.