புறநகர் ரயில் சேவை – அனுமதி கேட்டு முதலமைச்சர் கடிதம்
மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பின்னர், தமிழகத்தில் அளிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக சிறப்பு ரயில்கள் இயங்கி வருகிறது. இதைத்தொடர்ந்து, சென்னையில் புறநகர் ரயில்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் புறநகர் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.மேலும் அவரது கடிதத்தில், புறநகர் ரயில் சேவையை தொடங்க வலியுறுத்தி ஏற்கனவே தமிழக அரசு சார்பில் அக்டோபர் 2-ஆம் தேதி கடிதம் எழுதப்பட்டது.சென்னையில் புறநகர் ரயில் சேவையை தொடங்குமாறு தெற்கு ரயில்வேக்கு உத்தரவிட வேண்டும்.பொதுமக்களுக்கும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் புறநகர் ரயில் சேவை உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.
மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் –
புறநகர் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கடிதம் #EdappadiPalaniswami | #Train | #PiyushGoyal | #SuburbanTrain | #RailwaysMinister pic.twitter.com/Hj7Os9i7E2
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) October 23, 2020