7.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் கூறியிருப்பதில் எவ்வித நியாயமும் இல்லை – தினகரன்
ஆளுநர் விரைவில் 7.5% உள் இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு ஏற்கனவே 45நாட்களாகிவிட்ட நிலையில் அதுகுறித்து முடிவெடுக்க இன்னும் 3-4 வாரங்கள் தேவை என்று ஆளுநர் கூறியிருப்பதில் எவ்வித நியாயமும் இருப்பதாக தெரியவில்லை.
மருத்துவப் படிப்பில் சேர காத்திருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரின் மனநிலையை உணர்ந்து ஆளுநர் விரைவில் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மருத்துவப் படிப்பில் சேர காத்திருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரின் மனநிலையை உணர்ந்து ஆளுநர் விரைவில் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) October 23, 2020