அடுத்தக்கட்ட ஊடரங்கு தளர்வு அரசு அறிவிப்பு.!
நாடு முழுவதும் ஊரடங்கில் அடுத்தக்கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு பொது ஊரங்கினை நாடு முழுவதும் அமல்படுத்தியது.இந்நிலையில் கொரோனா ஊரடங்கு 6 மாதக் காலமாக நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அதில் சில தளர்வுகளை மத்திய அரசு அவ்வபோது அறிவித்து வருகிறது.
அந்த வகையில், சர்வதேச பயணிகள் இந்தியாவில் நுழைய மத்திய அரசு பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்நிலையில் இதில் கட்டுப்பாடுகள் சிலவற்றை தளர்த்தியுள்ளது.
அதன்படி, மின்னனு விசா, சுற்றுலா விசா தவிர மற்ற பிற விசாக்கள் மூலம் வெளிநாட்டினற்கு அனுமதி அளித்துள்ளது. இதை, தவிர பிற காரணங்களுக்காக வெளிநாட்டினர் விமானம், கப்பல் வழியாக இந்திய வரவும் மத்திய அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.