மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி பீகாரில் ஆட்சியமைக்கும் -பிரதமர் மோடி

Default Image

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக சிலர் வதந்திகளை பரப்புகின்றனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெறுகிறது.பீகார் தேர்தலை பொருத்தவரை ஆளும் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி வைத்து போட்டியிடுகிறது.மேலும் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணியும் போட்டியிடுகிறது.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.பீகாரில் கடந்த சில தினங்களாக அரசியல் தலைவர்களின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.ஆகவே பீகார் தேர்தல் களம் தற்போது சூடு பிடித்துள்ளது.காங்கிரஸ் ,பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.

இதனிடையே இன்று பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று சசாரம், கயா மற்றும் பாகல்பூரில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். சசாரத்தில்  உள்ள  பியாடா மைதானத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.அவரது உரையில்,தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக சிலர் வதந்திகளை பரப்புகின்றனர்.ஆனால் அது பலிக்காது.தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் முடிவு செய்துள்ளனர். மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி பீகாரில் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்