புதிய ஆட்சியர் அலுவலகங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார் – முதல்வர் பழனிசாமி
புதிய ஆட்சியர் அலுவலகங்கள் கட்டும் பணிக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
இதனை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் அண்மையில் தொடங்கப்பட்டது. இதில் திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட முதலமைச்சர் பழனிச்சாமி அடிக்கல் நாட்டியிருந்தார்.
இந்நிலையில், இன்று முதலமைச்சர் பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு ஆட்சியர் அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டினார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.119.21 கோடி மதிப்பிலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.104 மதிப்பிலும் ஆட்சியர் அலுவலகம் கட்டப்படுகிறது. புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசிக்கு மட்டும் ஆட்சியர் அலுவலகம் கட்ட இதுவரை இடம் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.