விரைந்த RAW…காத்மண்டுவில் நடந்தது என்ன.?
நேபாள பிரதமர் கேபி ஒலி இந்திய RAW தலைவ சமந்த் குமார் கோயலை நேரில் அழைத்து சந்தித்த விவகாரம் புயலை கிளப்பி உள்ளது.
இந்தியாவின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் அங்கம் வகிக்கும் நட்பு நாடுகளில் நேபாளமாம் அடங்கும். நட்பு வட்டாரத்தில் நெருங்கிய நாடாகவே நேபாளம் இந்தியாவும் இருந்து வந்தது. ஆனால், அண்மைக்காலமாகவே இதன் போக்கில் சற்று மாற்றம் தென்படுவதை அந்நாட்டு பிரமரின் பேச்சு மூலமாகவே தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவின் நிலப்பகுதிகளை தங்களுக்கு சொந்தமானது என்று நேபாளம் அறிவித்து தொடர்ந்து மல்லுக்கட்டும் போக்கையே ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்தியா மற்றும் நேபாளம் உறவில் விரிசல் ஏற்பட்டு இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
இந்த விரிசலை மேலும் விரிவடைய வைக்கவும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி சீனா நேபாளத்தை தனது கட்டுக்குள் கொண்டு வர துடித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவுடனான மோதல் போக்கு நேபாளத்தில் பிரதமர் ஒலிக்கு எதிராக உட்கட்சியிலேயே நெருக்கடி அதிகரித்ததுள்ளதை அந்நாடு ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது
இந்நிலையில் தான் இந்தியாவின் வெளியுறவு கொள்கைகளை வகுக்கின்ற அமைப்பாக விளங்கும் ( Research and Analysis Wing) RAW தலைவர் சமந்த் குமார் கோயல் சிறப்பு விமானம் மூலமாக காத்மாண்டுவிற்கு பயணம் மேற்கொண்டார்.
காத்மாண்டு சென்றடைந்த RAW தலைவரை பிரதமர் கேபி ஒலி சந்தித்து பேசியதாக கூறப்படும் வேளையில் காத்மாண்டு சென்ற ரா தலைவர் சமந்த் குமார் கோயல், அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் தியூபா, முன்னாள் பிரதமர் பாபுராம் பட்டாராய் ஆகியோர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.இந்த சந்திப்பு நேபாள அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.