விடுதலை புலிகள் மீதான தடை நீக்கம்! இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

 விடுதலை புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கி இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இங்கிலாந்தில், இலங்கையின் விடுதலை புலிகள் அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடையை நீக்க கோரி, கடந்த 2018-ம் ஆண்டு, இங்கிலாந்து அரசுக்கு, தமிழீழ அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டது. ஆனால், இங்கிலாந்தின் அப்போதைய உள்துறை செயலாளரான சாஜித் ஜாவித், இக்கடிதத்தை நிராகரித்தார்.

இதனையடுத்து, தமிழீழ அரசு சார்பில், இந்த தடையை எதிர்த்து, இங்கிலாந்தில், தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான, சிறப்பு ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையானது, ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில், விடுதலைப்புலிகள் இயக்கம், இப்போது பயங்கரவாதத்தில் தொடர்புடையவர்கள் என, நம்புவதற்கான நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என தமிழ் ஈழ அரசாங்கம் சார்பில் வாதிடப்பட்ட்டது.

இதனையடுத்து, விவாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், இங்கிலாந்து நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பின்படி, இங்கிலாந்தில், விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடை தவறானது என்று தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் இருந்து, விடுதலை புலிகள் இயக்கத்தை நீக்கி, நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.