“பாலாறு பொருந்தலாறு” அணையிலிருந்து 224.64 கனஅடி தண்ணீரை திறக்க உத்தரவு – முதல்வர் பழனிசாமி
பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து 224.64 கன அடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து தாடாகுளம் முதல் போக பாசனத்திற்காக தண்ணி திறந்து விடுமாறு வேளாண் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளது.
இந்நிலையில், வேளாண் பெருமக்களின் வேண்டுகோளை ஏற்று பாலாறு பொருந்தவாறு அணையிலிருந்து 25.10.2020 முதல் 3.3.2021 முடிய 130 நாட்களுக்கு விநாடிக்கு 20 கன அடி வீதம் மொத்தம் 224.64 மிக அடிக்கு கோயம் தாயாரும் கால்வாய் ஆயக்கட்டுக்கு உட்பட்ட பாசன நிலங்களின் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் தாடாகுளம் கால்வாய் ஆயக்கட்டுக்கு உட்பட்ட 844 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் அறிக்கை – 21.10.2020 pic.twitter.com/g7uBm1pBO9
— DIPR TN (@TNGOVDIPR) October 21, 2020