“மக்கள் அழைக்கும் போது நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார்!” – எஸ்.ஏ.சந்திரசேகர்
மக்கள் அழைக்கும் போது நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜயின் தந்தை மற்றும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், பாஜகவில் இணையவுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து தனியார் தொலைக்காட்சியிடம் விளக்கமளித்த எஸ்.ஏ.சந்திரசேகர், நான் பாஜகவில் இணையப்போகிறேனா என்ற கேள்விக்கே இடமில்லை என கூறினார். மேலும் பேசிய அவர், தனக்கென்று ஒரு அமைப்பு இருப்பதாகவும் மக்கள் அழைக்கும் போது விஜய் அரசியலுக்கு வருவார் எனவும் தெரிவித்துள்ளார்.