சோத்துப்பாறை அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு – முதல்வர் பழனிசாமி
சோத்துப்பாறை நீர்த்தேக்கத்திலிருந்து குடிநீர் தேவைக்காகவும், பாசனத்துக்காகவும் நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், சோத்துப்பாறை நீர்த்தேக்கத்தில் இருந்து முதல் போக சாகுபடி 1,825 ஏக்கர் பழைய நன்செய் நிலங்களுக்கும், 1,040 ஏக்கர் புதிய புன்செய் நிலங்களுக்கும் மற்றும் பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவைக்கும் சேர்த்து 26.10.2020 முதல் 15.3.2021 வரை, முதல் 51 நாட்களுக்கு விநாடிக்கு 30 கன அடி வீதமும், அடுத்த 31 நாட்களுக்கு விநாடிக்கு கன அடி வீதமும், கடைசி 59 நாட்களுக்கு விநாடிக்கு 25 கன அடி வீதமும், மொத்தம் 331.95 மி.க. அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்
இதனால், மொத்தம் 2,865 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் அறிக்கை – 21.10.2020 pic.twitter.com/bOmMShoK2I
— DIPR TN (@TNGOVDIPR) October 21, 2020