இனிமேல் டெலிவரி ஊழியராக இந்த சான்றிதழ் அவசியம்!

இனிமேல் டெலிவரி ஊழியராக இந்த சான்றிதழ் அவசியம்.

கடந்த வாரம், சென்னையில், கடந்த 2 ஆண்டுகளில் 68 புல்லட்டுகளை திருடிய கும்பல் பொலிஸாரின் கைவசம் சிக்கியது. இந்த திருட்டில் ஈடுபட்ட திருட்டு கும்பல், போலிஸாருக்கு சந்தேகம் வராமல் இருக்க , ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் போல செயல்பட்டு, இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.

 சமீபத்தில்,திருட்டு, செயின் பறிப்பு போன்ற சம்பவங்களில் பல டெலிவரி ஊழியர்கள் சிக்கியுள்ளனர். உணவை கொண்டு செல்வது போல, போதை பொருட்களையும் கொண்டு சென்றவர்கள் பலர் பொலிஸாரின் கைவசம் சிக்கினார். அவர்களில், பலர் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஊழியராகவும், சிலர் முன்னர் ஊழியராக இருந்ததும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், இப்படிப்பட்ட சம்பவங்களை தடுப்பதற்காக, டெலிவரி ஊழியர்களை பணியமர்த்தும் முன்பு, ஆவார்கள் காவல்துறை நன்னடத்தை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். மேலும், இந்த நன்னடத்தை சான்றிதழை, காவல்துறையின் இணைய சேவையான, CCTNS மூலம் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.