அமெரிக்காவை விட இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது – பிரதமர் மோடி!

அமெரிக்காவை விட இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கியது முதல், தற்பொழுது வரை ஏழாவது முறையாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து காணொலி மூலமாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கொரோனா தாக்கம் குறைந்தது என நினைத்து பலர் பாதுகாப்பு நடைமுறைகளை சரியாக கடைபிடிக்காமல் உள்ளதாக கவலை தெரிவித்தார்.
மேலும், அமெரிக்காவை விடஇந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளதாக கூறிய பிரதமர், மருத்துவர்கள், செவிலியர்கள் தங்களின் பணியை சிறப்பாக ஆற்றி வருவதாகவும், அனைவரும் அலட்சியமின்றி கவனத்துடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
April 28, 2025