உச்சம் தொட்ட வெங்காய விலை! எகிப்தில் இருந்து 135 டன் வெங்காயம் இறக்குமதி!

Default Image

எகிப்தில் இருந்து 135 டன் வெங்காயம் இறக்குமதி.

ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் பருவமழை பெய்து வருவதால், வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. இதனையடுத்து, கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காய விலை கிடுகிடுவென உயர்ந்த நிலையில், கிலோ ரூ.100 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், தலைமை செயலகத்தில், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில், வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, கூட்டுறவு பண்ணை பசுமை காய்கறி கடைகள் மூலமாக, நாளைமுதல் சென்னையிலும், நாளை மறுநாள் முதல் மற்ற மாவட்டங்களிலும், வெங்காயம் ரூ.45-க்கு விற்பனை செய்யப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 135 டன் வெங்காயம், கோயம்பேடு மார்க்கெட் வந்தடைந்துள்ளது. இதனால் ஒரு கிலோ வெங்காயம் ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்