மிஷன் சக்தி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு எதிரான வழக்கில் ஆண்டுக்கு 4 பேர் கொல்லப்படுகிறார்கள்!
உத்திரபிரதேசத்தில் மிஷன் சக்தி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு எதிரான வழக்கில் ஆண்டுக்கு 4 பேர் கொல்லப்படுகிறார்கள் எனும் தகவல் வெளியாகியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள லக்னோவில் தற்பொழுது பெண்களுக்கு எதிரான தண்டனை குறித்து கூறிய மாநில அரசாங்க செய்தி தொடர்பாளர் ஒருவர், யோகி ஆதித்யநாத் அவர்களின் முயற்சியால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளதாகவும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மிஷன் சக்தி எனும் திட்டத்தை மாநில அரசு துவங்கியதும், இந்த திட்டத்தின் கீழ் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் பெண்களுக்கு எதிரான 11 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 14 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
எல்லா இடங்களிலும் மரண தண்டனை என்பது சாதாரணமாக கொடுக்கப்படக்கூடியது அல்ல; இருந்தாலும் பெண்கள் தைரியமாக உடனடி வழக்கு தொடுப்பதன் விளைவுதான் ஏராளமான மரண தண்டனைகள் கொடுக்கப்பட வாய்ப்பாக அமைந்து உள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்த திட்டத்தின் கீழ் பெண் குழந்தை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதி கிடைக்க உறுதி செய்வதாக ஏடிஜிபி அசுதோஷ் பாண்டே அவர்கள் கூறியுள்ளார்.