குணமடைந்த கொரோனா நோயாளிகளுக்கு பல மாதங்களாக அறிகுறிகள் இருக்கலாம் – ஆய்வில் தகவல்

Default Image

இங்கிலாந்து ஒரு சிறிய ஆய்வில், மருத்துவமனையில் இருந்து குண்டமடைந்த கொரோனா நோயாளிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், ஆரம்ப தொற்றுநோய்க்குப் பிறகு, இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு மூச்சுத் திணறல், சோர்வு, பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்ற அறிகுறிகளை அனுபவித்ததாக ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றது.

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தலைமையிலான இந்த ஆராய்ச்சி, கொரோனா தொற்று நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 58 நோயாளிகளில் கொரோனாவின் நீண்டகால தாக்கத்தை கவனித்து வந்துள்ளனர்.

அதில், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட பின்னர் சில நோயாளிகளுக்கு பல உறுப்புகளில் அசாதாரணங்கள் இருப்பதையும், தொடர்ச்சியான வீக்கம் சில மாதங்களுக்கு சில பிரச்சினைகளை ஏற்படுத்துவதையும் கண்டறியப்பட்டுள்ளன.

ஆக்ஸ்போர்டு ஆய்வின் முடிவுகள்:-

கொரோனா தொடங்கிய இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குப் பிறகு, 64% நோயாளிகள் தொடர்ந்து மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டுள்ளனர், 55% பேர் குறிப்பிடத்தக்க சோர்வைப் பதிவு செய்துள்ளனர்.

மேலும், எம்.ஆர்.ஐ ஸ்கேன்களில் 60% கொரோனா நோயாளிகளின் நுரையீரலில், 29% சிறுநீரகங்களில், 26% இதயங்களில் மற்றும் 10% கல்லீரலில் அசாதாரணங்கள் காணப்படுகிறதாம்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்