மத்திய வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
மத்திய வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும் வளிமண்டலத்தின் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய உள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வங்கக்கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அடுத்த மூன்று நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுருத்தப்பட்டுள்ளது.