“ஜெகதீசனிடம் இல்லாத ஸ்பார்க்கா ஜாதவிடம் இருக்கிறது?” – தோனியை கடுமையாக விமர்சித்த ஸ்ரீகாந்த்

ஜெகதீசனிடம் இல்லாத ஸ்பார்க்கா ஜாதவ், பியூஸ் சாவ்லாவிடம் இருக்கிறது? என தோனியை இந்திய கிரிக்கெட் அணியில் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் விமர்சித்தார்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 37-வது போட்டியில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்க வைக்க சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதியது. இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி அடைந்து, பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாயுப்பை இழந்துள்ளது.
இது, ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. போட்டியில் தோள்விகுறித்து தோனி நேற்று விளக்கமளித்தார். அதில் அவர், இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லையென கூறியது, பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்தி, பலரும் இந்த கருத்துக்களுக்கு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர் .
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரலையின் போது விமர்சித்தார். அப்பொழுது பியூஷ் சாவ்லா மற்றும் கேதார் ஜாதவின் தொடர்ச்சியான தேர்வுகள் குறித்து பேசிய அவர், மைதானத்தில் விரைவாகச் செல்ல ஒரு ஸ்கூட்டர் தேவை என்று அவர் கூறினார்.
தோனி கூறியதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் எனக் கூறிய அவர், இனி வரும் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என தெரிவித்தார். அதுமட்டுமின்றி, ஜெகதீசனிடம் இல்லாத ஸ்பார்க்கா ஜாதவ், பியூஸ் சாவ்லாவிடம் இருக்கிறது? என்ற கேள்வியை எழுப்பினார். தோனியின் கருத்து அபத்தமானது மற்றும் ஏற்றுக்கொள்ளவும் முடியாதது என கூறினார்.
அதுமட்டுமின்றி, ஜெகதீசன் இதுவரை ஆடிய போட்டிகளில் தனது ஸ்பார்க் என்னவென்று நிரூபித்து விட்டார். கரண் ஷர்மா கூடுதலாக ரன்கள் குடுத்தாலும் விக்கெட் கைப்பற்றினார். அதற்கு பதில் பியூஸ் சாவ்லாவை கொண்டுவந்தார்கள், முடிந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.