சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாததால், சீல் வைக்கப்பட்ட சென்னை T.நகரில் உள்ள குமரன் சில்க்ஸ்!

சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாததால், சீல் வைக்கப்பட்ட சென்னை T.நகரில் உள்ள குமரன் சில்க்ஸ் கடை.
கடந்த சில மாதங்களாகவே உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது, இந்நிலையில் தமிழகத்திலும் இதன் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது. இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை தமிழகத்தில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இருப்பினும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அரசு சில தளர்வுகளை அறிவித்து முக்கியமான கடைகள் போக்குவரத்துக்கள் ஆகியவற்றை இயங்க வைத்துள்ளது.

கடைகள் அனைத்தும் திறக்க அனுமதித்திருந்தாலும், பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை டி நகர் பகுதியில் உள்ள மிகப்பெரிய கடையான குமரன் சில்க்ஸ் கடைக்கு இன்று மாநகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது அங்கு மக்கள் சமூக இடைவெளி சற்று இன்றி கூட்டம்கூட்டமாக குவிந்து காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை அவசர அவசரமாக இழுத்து வெளியேற்றி பின் கடை மீது சீல் வைத்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!
April 18, 2025