தன்மானம் இருக்கா?? இருந்தா இருப்பாரா?? பவார் பாய்ச்சல்
சுயமரியாதை இருந்தால் கவர்னர் பதவியில் தொடருவாரா? என்பது குறித்து கவர்னரே யோசிப்பார் என சரத்பவார் காட்டமாக தெரிவித்துள்ளார்.
மகராஷ்டிரா மாநிலத்தில் வழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாக ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அண்மையில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
அக்கடிதத்தில் ஆளுநர் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயை திடீரென மதச்சார்பின்மைக்கு மாறிவிட்டீர்களா? என்று கேட்டு கடிதம் எழுதியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இக்கடிதத்திற்கு முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயும் பதிலடி கொடுக்கும் வகையில் அரசியல் சாசனத்தின் கீழ் செயல்படும் கவர்னர் என்று விமர்சித்தார்.இதனால் ஆளுநர் -முதலமைச்சர் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில் உஸ்மனாபாத் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கவர்னர், முதலமைச்சர்க்கு ஆளுநர் எழுதிய சர்ச்சைக்குரிய கடிதம் குறித்து கூறியதாவது:
முதலமைச்சர்க்கு கவர்னர் எழுதிய கடிதத்தில் உள்ள வார்த்தைகள் குறித்து உள்துறை மந்திரி அமித்ஷா அதிருப்தி தெரிவித்து உள்ளார். சுயமரியாதை உள்ள எவரும் இனிமேல் அப்பதவியில் தொடரலாமா? அல்லது வேண்டாமா ?எண்று ஆளுநரே யோசிப்பார் என குறிப்பிட்டுள்ளார்.