நிலவில் 4-ஜி நெட்வர்க் திட்டம்.. நாசாவுடன் இணையும் நோக்கியா!

Default Image

நிலவில் 4-ஜி நெட்வர்க்கை அமைக்கும் திட்டத்தில் களமிறங்கியுள்ள நாசா, பிரபல நிறுவனமான நோக்கியாவிற்கு 103 கோடி ருபாய் வழங்கியுள்ளது.

ஒரு காலத்தில் நிலவை யாரும் எட்டமுடியாது என்று கூறிய நிலையில், தற்பொழுது நிலவை எட்டும் உயரத்திற்கு நாம் அடைந்துவிட்டோம். அந்தவகையில் தற்பொழுது நிலவில் 4-ஜி நெட்வர்க் அமைக்கும் பணியில் நாசாவுடன் நோக்கியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

சந்திரனில உள்ள வளங்களுக்கான புதிய சந்தையை உருவாக்கும் செயல்முறையை அமைத்து வருகிறது. இதற்காக அங்குள்ள உள்ள பாறைகளையும், பாறை படிவங்களையும் எடுக்கக்கூடிய உலகெங்கிலும் உள்ள தனியார் நிறுவனங்களைத் நாசா தேடுகிறது.

2028 விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பி, ஆய்வு செய்வதற்காகவும், அதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்க பல நிறுவனங்களுடன் 2,714 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும், நிலவில் ஆய்வு மேற்கொள்ளும் வீரர்கள் தொடர்புகொள்ளவும், HD தரத்தில் வேகமாக படங்களை அனுப்பவும் நிலவின் மேற்பரப்பில் 4-ஜி நெட்வர்க்கை அமைக்க பிரபல நிறுவனமான நோக்கியாவிற்கு 103 கோடி ருபாய் வழங்கியுள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில், இந்த 4ஜி அமைப்பு நிலவின் மேற்பரப்பில் நீண்ட தூரத்தில் உள்ளீட்டவற்றை தொடர்பு கொள்ள உதவும் என்று கூறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்