முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றும் 2 பேர் மட்டுமே உள்ள இத்தாலிய நகரம்!
இத்தாலியில் “நார்டோஸ்” எனும் நகரில் இரண்டு பேர் மட்டும் வசிக்கும் நிலையில், அவர்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி வருகின்றனர்.
இத்தாலியில் கொரோனா தொற்றால் இதுவரை 3.9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2.47 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 36,427 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியையும், முகக்கவசம் அணிய அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
இத்தாலி நாட்டில் உள்ள “நார்டோஸ்” எனும் நகரில் 82 மற்றும் 74 வயதுடைய இரண்டு குடியிருப்பு வாசிகள் மட்டுமே வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி வருகின்றனர்.
அதில் குடியிருப்புவாசி ஒருவர் கூறியதாவது, “எனக்கு கொரோனா வைரஸை நினைத்தால் பயமாக இருக்கிறது. எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், யார் என்னைக் கவனிப்பார்கள்? என்னை நானே பார்த்துகிற வேண்டும்” என்று கூறினார்.