பண்டப்பொருளா?? பெண்!!!!துப்பாக்கி முனையில் பாலியல் துஷ்பிரயோகம்.!உ.பியில் கொடூரம்

உத்தரபிரதேசத்தின் கான்பூர் தேஹத் மாவட்டத்தில் பட்டியலின பெண் ஒருவரை முன்னாள் கிராமத் தலைவர் உள்ளிட்ட இரண்டு நபர்கள் துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மீண்டும் உ.பியில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. இக்கொடூரம் நடந்து ஒரு வாரம் ஆன போதிலும் ஞாயிற்று கிழமை தான் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கான்பூர் தேஹாத் மாவட்ட போலீஸ் சூப்ரண் கேசவ் குமார் சவுத்ரி அதிர்ச்சி தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் படி 22 வயது பெண் வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் உள்ளே நுழைந்து துப்பாக்கி முனையில் ஒவ்வொருக்கு பின் ஒவ்வொருவராக பாலியல் வன்கொடுமையை
அரங்கேற்றி உள்ளனர்.
மேலும் இது குறித்து வாய் திறந்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று குடும்பத்தாரை மிரட்டியுள்ளனர் கொடூரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன செய்வதென்று தெரியாமல் பெற்றோர்கள் வேதனை கண்ணீர் வடித்த நிலையில் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டிய மிரட்டலையும் மீறி புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் கொடூர அம்மிருகங்கள் மீது ஐபிசி மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்படது.தலைமறைவாகிய 2 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக சவுத்ரி தெரிவித்துள்ளர்.
பெண் புனிதமாவால் எவ்வளவு தான் சமூகம் மாறினாலும் பெண்ணை இன்றும் ஒரு பண்டப்பொருளாகவே பார்க்கும் சமூகத்தில் தான் வாழ்கிறோம் என்பதே வேதனை அளிக்கிறது என்பதே உண்மை.(பண்டபொருள் என்பது பயன்படுத்தி தூக்கி எரிவதனை குறிக்கிறது) பெண்ணையும் இப்படியே சமூகம் பார்க்கிறதா??என்று நாட்டில் நடந்து வரும் கொடூரங்கள் நிருபித்து வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025