பள்ளிகள் திறப்பு குறித்து எந்த ஆலோசனை கூட்டமும் நடைபெறவில்லை – அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிகள் திறப்பு குறித்து எந்த ஆலோசனை கூட்டமும் நடைபெறவில்லை.
கொரோனா ஊரடங்கால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் எப்போது திறக்கும் என கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையனிடம் பள்ளிகள் திறப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர், தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்றும், அது தொடர்பாக எந்த ஆலோசனை கூட்டமும் நடைபெறவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், முதல் முறை நீட் தேர்வில் தோல்வியுற்றவர்களுக்கு, 2-வது முறையாக அரசு பயிற்சி வழங்கப்படாது என்றும், தனியார் பயிற்சி மையம் மூலம் பயிற்சி பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025
மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
April 8, 2025