வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஹைதராபாத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு .!
இரண்டு நாட்கள் பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹைதராபாத்தில் இன்று இரவு அதிக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்நிலையில், லேசான முதல் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை நகரத்தின் பல பகுதிகளிலும் ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஹைதராபாத் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், மஞ்சள் நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், மழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் நீர் நிரம்ப வாய்ப்பு உள்ளது. இதனால், தேவையான நடவடிக்கை எடுக்க எடுக்கப்பட்டுள்ளது.