கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுடன் பேட்மிட்டன் விளையாடிய முதல்வர்!
உத்தரகாண்ட் மாநிலத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுடன் அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் பேட்மிட்டன் விளையாடினார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கு அம்மாநில அரசு சார்பாக விளையாட்டு போட்டிகள், அம்மாநில தலைநகரான டேராடூனில் நடத்தப்படுகிறது. அதில் இன்று நடைபெற்ற பேட்மிட்டன் மற்றும் வாக்கத்தான் போட்டிகளை அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தொடங்கி வைத்தார்.
அதில் பேட்மிட்டன் போட்டியில் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் முதல்வரும், கொரோனாவில் இருந்து மீண்ட ஒரு நபரும் விளையாட, மறுபுறத்தில் செயலாளர் கேல் பிகே சந்த் மற்றும் கொரோனாவில் இருந்த மற்றொருவர் ஆடினார்கள். இதில் முதல்வரில் அணி, 10-5 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.
அதன்பின் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதல்வர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல பக்க விளைவுகள் ஏற்படுவதாக கூறிய அவர், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் அதில் இருந்து வெளியேற முடியும் என தெரிவித்தார்/
அதுமட்டுமின்றி, கொரோனா பரவளின் விகிதம் குறைந்தாலும், நாம் அனைவரும் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.