வெளியான நீட் தேர்வில் அரசு பள்ளி அசத்தல்… கிடைக்குமா 7.5% ஒதுக்கீடு… வழி பிறக்குமா மாணவர்களுக்கு…

Default Image

மருத்துவ படிப்புக்கான தேசிய அளவிளான நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின.

இதில் தமிழக அரசு பள்ளிகளில் மொத்தம் 1623 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் பெற்றுள்ளனர்.அவர்களில் 90 மாணவர்கள் 300 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். நான்கு மாணவர்கள் 500க்கு மேல் பெற்றுள்ளனர். 71 பேர் 300 முதல் 400 வரை பெற்றுள்ளனர். 15 பேர் 400 முதல் 500க்குள் மதிப்பெண் பெற்றுள்ளனர்.இவர்களில் 750 பேர் அரசு பள்ளி மாணவர்கள் ஆவர்.  மற்றவர்கள் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிட்த்தக்கது.

அவர்கள் எடுத்த மதிப்பெண் விவரங்கள்:

  • கோயமுத்தூர் கிருஷ்ணம்மாள் பள்ளி மாணவி வாசுகி 580;
  • காஞ்சிபுரம் செயின்ட் ஜோசப் மாணவர் சக்திவேல் 552;
  • நவீன்குமார் 527 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
  • அரசு பள்ளிகளில் படித்த மாற்று திறனாளி மாணவர்கள் 35 பேருக்கு பள்ளி கல்வி இயக்குனரகமும், கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லுாரி முன்னாள் மாணவர் சங்கமும் இணைந்து பயிற்சி அளித்தன. அதில் மூன்று பேர் தேர்ச்சி மதிப்பெண் பெற்றுள்ளனர். அவர்களில்
  • திருவள்ளூர் கண்டிகை அரசு பள்ளி மாணவர் கிஷோர்குமார் 201 மதிப்பெண் பெற்று மாற்று திறனாளி பிரிவில் அகில இந்திய அளவில் 1113ம் இடம் பெற்றுள்ளார்.
  • அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு அமலானால் இவர்களில் பலருக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.பயிற்சி மைய துனையின்றி அசத்திய மாணவர்அரசு பள்ளி மாணவர்களில் பெரும்பாலானவர்கள் அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தனியார் பயிற்சி வழியாகவும், ஆசிரியர்கள் மற்றும் தனியார் அமைப்புகள் அளித்த பயிற்சி வழியாகவும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இதில் அரக்கோணத்தை சேர்ந்த சக்திவேல் என்ற மாணவர் எந்த பயிற்சி வகுப்புக்கும் செல்லாமல் 674 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார்.இவர் 10ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து விட்டு பிளஸ் 1 பிளஸ் 2 மட்டும் தனியார் பள்ளியில் முடித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்