உங்களுக்கான இன்றைய நாள் எப்படி… இதோ இன்றைய (18.10.2020)ராசி பலண்கள்….

Default Image

மேஷம்:வீண் பழிகள் அகலும் எல்லாம்  நாள். அயல் நாட்டிலிருந்து எதிர்பார்த்த அனுகூலமானத் தகவல் வந்து சேரும். உத்தியோக முயற்சி கைகூடும். ஆரோக்கியம்  சீராகும்.

ரிஷபம்:உத்தியோகத்தில் தொடர்பான தொல்லை அகலும் நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதிப்பீர்கள். நெடுநாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

மிதுனம்:மனஉறுதியுடன் செயல்படும் நாள். மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்பதால் நன்மை ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. விலகிச் சென்றர்கள் மீண்டும் வந்திணைவர்..

கடகம்:எதிர்பாராத வரவு இதயத்தை மகிழ்விக்கும் நாள். செய்தொழிலில் மேன்மையும், உயர்வும் கிடைக்கும்.சொந்த, பந்தங்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரியப்பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்..

சிம்மம்:தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். மறக்க முடியாத சம்பவம்  நடைபெறும். நினைத்த காரியம் குறைந்த செலவில் முடிவடையும்.

கன்னி:திட்ட காரியங்கள் வெற்றி பெறும் நாள். கூறும் வார்த்தைக்கு குடும்பத்தினர் மதிப்புக் கொடுப்பர். நிலையான வருமானத்திற்கு வழிபிறக்கும். பெற்றோர்களின் ஒத்துழப்போடு தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.

துலாம்: மன திருப்த்தியான நாள். இன்று புதிய சொத்துகள் வாங்க வாய்ப்பு உள்ளது. வர்த்தையில் கவனமாக இருக்க வேண்டும். உற்றார் உறவினரால் ஆதாயம் உண்டு.

விருச்சகம்:ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை கூடும் நாள். தொழிலில்  புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வீடு கட்டும் முயற்சிக்கு உற்றத்துணையாக நண்பர்கள் இருப்பர். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள்.

தனுசு: வரன்கள் வாயில் தேடி வருகின்ற நாள். வருமானம் திருப்தி தரும்.எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவெடு எடுப்பீர்கள். அன்போடுவர் மனக்குழப்பத்தை அகற்றுவார்.

மகரம்.மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து செயல்படுங்கள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள் சிக்கனத்தை கடைபிடியுங்கள்.

கும்பம்:  நண்பர்கள் நல்ல தகவலைக்கொண்டு வந்து சேர்க்கும் நாள். தொழில் முன்னேற்றத்திற்காக தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். பக்கத்து வீட்டார் ஏற்பட்ட பகை மாறும்.

மீனம்::தடைகளை எல்லாம் தாண்டி முன்னேற்றம் காணும் நாள். தனவரவு திருப்தி தரும். மதிப்பும், மரியாதையும் உயரும். சொத்துத் தகராறுகள் அகலும்.திடீர் பயணம் மனமகிழ்ச்சி தரும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்