பல்கலைக்கழகங்கள் தனியார்மயமாக வழி வகுக்கக்கூடாது – ராமதாஸ்

Default Image
 பல்கலைக்கழகங்கள் தனியார்மயமாக வழி வகுக்கக்கூடாது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா முழுவதும் உயர்கல்வி தனியார்மயமாக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பல பல்கலைக்கழகங்கள், தொழில்நிறுவனங்களுடன் கூட்டாண்மை ஏற்படுத்திக் கொண்டு புதிய படிப்புகளை வழங்க ஆயத்தமாகி வருகின்றன. புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கது என்றாலும் கூட, அவை பல்கலை.களின் தனியார்மயத்திற்கு வழிவகுத்து விடும் என்பது தான் கவலையளிக்கிறது.
அறிவியல், தொழில்நுட்பம், வணிகம் ஆகியவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நிலையில், அவற்றுக்கு ஈடு கொடுக்கும் வகையில், புதிது, புதிதான படிப்புகளை உருவாக்க வேண்டியிருக்கிறது. மற்றொருபுறம் மாணவர்களின் திறன்களை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக மத்திய அரசு வகுக்கும் கொள்கைகளின் அடிப்படையில், மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்கான படிப்புகளும் உருவாக்கப்படுகின்றன.
பல்கலைக்கழகங்கள் இப்படி மாறுவதற்கு காரணம்…. அவற்றின் செலவுகள் அதிகரித்து விட்டதும், அவற்றுக்கும் அரசு வழங்கும் மானியம் குறைந்து விட்டதும் தான். புதிய படிப்புகளையும் இலவசமாகவோ, குறைந்த கட்டணத்திலோ வழங்கும் அளவுக்கு பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் மானியத்தை அதிகரித்தால் மட்டுமே பல்கலைக்கழகங்கள் தனியார்மயமாவதை தடுக்க முடியும். இதை உணர்ந்து கூட்டாண்மை முறையில் நடத்தப்படும் பாடங்களை படிப்படியாக பல்கலைக்கழகங்களே நேரடியாக நடத்தும் நிலையை உருவாக்க வேண்டும்; அதன்மூலம் பல்கலைக்கழகங்கள் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் கல்விக்கோயிலாக தொடர்ந்து திகழ்வதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

https://www.facebook.com/DrRamadoss/posts/1655355251295421

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest