புகழ்பெற்ற ‘சபரிமலை ஐயப்பன்’ கோயில் சந்நிதானம் திறப்பு.!
கொரோனா தொற்றுநோயால் ஆறு மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்ட பின்னர் இன்று காலை பக்தர்களுக்காக புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று ஒரு சில பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பிரார்த்தனை செய்தனர். மேலும், நேற்று மாலை மாதாந்திர பூஜைக்காக திறக்கப்பட்ட இந்த கோயில், பக்தர்கள் அக்டோபர் 21 வரை பிரார்த்தனை செய்ய அனுமதிக்கப்படுகிறது.
அந்த வகையில், இன்று அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்ட சந்நிதானம் பக்தர்களுக்கு பிரார்த்தனை செய்ய அனுமதிக்கப்பட்டது என்று கோயிலின் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் தெரிவித்தது. மேலும், இன்று தரிசனத்திற்காக 246 பேர் முன்பதிவு செய்துள்ளனர். ஒவ்வொரு நாளும் 250 பேர் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
இதற்கிடையில், 10 முதல் 60 வயதுக்குள் வரை உள்ள பக்த்ர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய தகுதியானவர்கள் என்றும் மருத்துவ சான்றிதழ் வைத்திருப்பதால் மட்டுமே பிரார்த்தனை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.