அதிமுக தலைமை அலுவலகத்தில் கொடி ஏற்றிய பன்னீர் செல்வம்
அதிமுக 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பன்னீர் செல்வம் கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.
அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் அக்கட்சியை தொடங்கிய நாள் அக்டோபர் 17ஆம் தேதி ஆகும்.அதிமுக தொடங்கி 48 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது .எனவே இன்று அதிமுக 49வது ஆண்டு தொடக்க விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.