ரேடார் மூலம் ராஜராஜ சோழன் சமாதியை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!
ரேடார் மூலம் ராஜராஜ சோழன் சமாதியை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறப்புமிக்க தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் அவர்களின் சமாதி கும்பகோணம் அருகே உள்ள உடையாளூர் எனும் சிற்றூரில் உள்ளதாக கூறப்படுகிறது. அவரது சமாதி உள்ளதாக கருதப்படக் கூடிய இடத்தில் லிங்கம் ஒன்று வழிபாடு செய்யப்பட்டு வருகிறது, இது தான் சமாதி எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த இடத்தை தொல்லியல் ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, இந்த மனுவை நீதிபதி கிருபாகரன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அமர்வு விசாரித்தது. இதனையடுத்து உடையாளூரில் உள்ள லிங்கத்தை சுற்றி உள்ள இரண்டரை ஏக்கர் நிலத்தை நவீன ரேடார் கருவி மூலம் ஆய்வு செய்ய தமிழக தொல்லியல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.