அமெரிக்காவின் கொலரடோ மாகாண அரபாஹோ மற்றும் ரூஸ்வெல்ட் காட்டுப்பகுதியில் வரலாறு காணாத காட்டுத்தீ!

Default Image

அமெரிக்காவின் கொலரடோ மாகாண அரபாஹோ மற்றும் ரூஸ்வெல்ட் காட்டுப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ வரலாறு காணாத அழிவை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள காடுகளில் கடந்த சில மாதங்களாக காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள அரபாஹோ மற்றும் ரூஸ்வெல்ட் ஆகிய பகுதிகளில் ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட காட்டுத் தீயால் அப்பகுதியில் வசித்து வந்த மலைவாழ் சமூகத்தினர் அனைவரும் தங்களது வீடுகளை காலி செய்து வெளியேறிய நிலையி, ஒரு லட்சத்து 67 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான காடுகள் தற்போது வரை அழிக்கப்பட்டுள்ளது.

மேலும் அப்பகுதியில் வாழ்ந்த மலைவாழ் சமூகத்தினரின் வீடுகளும் எரிந்து நாசமாகியுள்ளது. 90 கிலோ மீட்டர் வேகத்தில் மணிக்கு வீசக்கூடிய காற்று காய்ந்த வனப்பகுதியில் உள்ள காடுகள் முழுவதையும் அழித்து வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இதுவரை 56 சதவீதம் மட்டுமே தீ கட்டுப்படுத்தபட்டுள்ளதாகவும், மேலும் தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. உயிர்சேதம் இருப்பினும் அது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்