அடுத்த 2.5 மாதங்கள் கொரோனா எதிரான போராட்டத்தில் முக்கியமானவை – சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தலைமையில் கோவிட் -19 தயாரிப்புகளை மறுஆய்வு செய்வதற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் சி.எஸ்.ஐ.ஆரின் கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனங்களின் தலைவர்களுடன் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் அடுத்த 2.5 மாதங்கள் திருவிழா காலம் மற்றும் குளிர்காலம் என்பதால் இந்தியாவில் கொரோனாக்கு எதிரான போராட்டம் முக்கியமான காலமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் நாம் கொரோனா க்கு எதிராக 10வது மாதத்தில் நுழைகிறோம் .இதற்கான முதல் கூட்டம் ஜனவரியில் நடைபெற்றது .அப்போதிருந்து, பயணம் இடைவிடாமல் இருக்கிறது . ஆனால் இன்று, கொரோனா வைரஸுக்கு எதிரான எங்கள் போராட்டத்திற்கு குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம் என்று பெருமையுடன் கூறலாம், ”என்று அமைச்சர் கூறினார்.
இதற்கு தடுப்புபூசிகள் வரவில்லை என்றலாலும் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது .ஒருதடுப்பூசி மூன்றாம் கட்டத்தையும் மற்ற இரண்டு இரண்டாம் கட்டத்தையும் நெருங்கியுள்ளது .முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக தடுப்பூசியை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.
குளிர் காலநிலை மற்றும் குறைந்த ஈரப்பதம் உள்ள நிலையில் சுவாச வைரஸ்கள் வேகமாக வளர்கின்றன. குளிர்காலத்தில், குடியிருப்பு வீடுகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே இந்திய சூழலில், குளிர்காலத்தில் கொரோனாவின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கருதுவது தவறல்ல, ”என்று ஹர்ஷ் வர்தன் இதற்கு முன்பு தெரிவித்தார்.