#IPL2020: 149 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கொல்கத்தா..!

இன்றைய 32-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுப்மான் கில்,
ராகுல் திரிபாதி இருவரும் இறங்க வந்த வேகத்தில் ராகுல் திரிபாதி 7 ரன் எடுத்து விக்கெட்டை இழக்க, பின்னர் இறங்கிய ராணா 5
தினேஷ் கார்த்திக் 4 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

பின்னர், மத்தியில் களம் கண்ட மோர்கன், பாட் கம்மின்ஸ் இருவரும் நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். அதிரடியாக விளையாடிய பாட் கம்மின்ஸ் அரைசதம் அடித்து  53 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். மோர்கன் 39 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியாக கொல்கத்தா அணி  20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 148 ரன்கள் எடுத்தனர். மும்பை அணி 149 ரன்கள் இலக்குடன் களமிறங்க உள்ளது.

author avatar
murugan