கள்ளக்காதலன் வீட்டின் முன்பு மனைவி தலையை வெட்டி வைத்துவிட்டு காவல்நிலையத்தில் சரணடைந்த கணவர்!
கள்ளக்காதலன் வீட்டின் முன்பு மனைவி தலையை வெட்டி வைத்துவிட்டு காவல்நிலையத்தில் சரணடைந்த கணவர்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சங்கரெட்டி என்னும் மாவட்டத்தில்உள்ள அனந்தசாகர் எனும் கிராமத்தில வசித்து வரக்கூடிய அம்சமா எனும் 35 வயது பெண்ணின் கணவர் ஜூரு. இருவரும் வாழ்ந்து வந்த வாழ்க்கையில் திடீரென அம்சம்மாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றி உள்ளதை அடுத்து ஜூரு தன் மனைவியை கோடரியால் தாக்கியுள்ளார்.
அதன் பின் மிகுந்த கோபத்தில் அவரது தலையை வெட்டி உடலை வீட்டிற்கு அருகில் உள்ள புதரில் வீசி விட்டு, அவர் யார் மீது சந்தேகத்தில் இருந்தாரோ, 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாராயண் கேட் பகுதியில் உள்ள அந்த நபரின் வீட்டிற்கு சென்று தனது மனைவியின் தலையை அவர் வீட்டின் முன்பு வைத்து விட்டு சென்றுள்ளார். அதன் பின் தானே காவல் நிலையத்தில் சென்று செய்தவற்றை எல்லாம் சொல்லி சரணடைந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.