ஏ.சி இறக்குமதிக்கு மத்திய அரசு தடை..!
இந்தியாவுக்கான ஏ.சி(ஏர் கண்டிஷனர்) இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்தல் மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியைக் குறைக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏசி சந்தை மதிப்பு 5-6 பில்லியன் டாலர்கள், அதில் பெரும்பாலானவை இறக்குமதி செய்யப்படுகின்றன. பல சந்தர்ப்பங்களில், ஏசியின் 85 முதல் 100 சதவீதம் பாகங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தியா ஏசி இறக்குமதியில் 28 சதவீதத்தை சீனாவிலிருந்து செய்கிறது.
ஏர் கண்டிஷனர் முன்னதாக ஜூன் மாதத்தில், கார்கள், பேருந்துகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பயன்படுத்தப்படும் புதிய நியூமேடிக் டயர்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.