செவ்வாழையின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் அறிவோம்!

Default Image

பார்ப்பதற்கு எளிமையாகவும், உண்ணுவதற்கு சுவையாகவும் இருக்கக்கூடிய செவ்வாழைப்பழத்தில் எக்கச்சக்கமான மருத்துவ குணங்களும் நன்மைகளும் உள்ளது. இதில் உள்ள உயிர்சத்துக்கள் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து என பல்வகை தன்மைகளும் நாம் உயிர் வாழ்வதற்கு தேவையான அத்தியாவசியமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அவைகளைப் பற்றி இன்று பார்க்கலாம் வாருங்கள்.

செவ்வாழையின் மருத்துவ குணங்கள்

அமெரிக்காவின் நாடுகளான கோஸ்டரீகா மற்றும் கியூபாவை தாயகமாகக் கொண்ட செவ்வாழைப் பழத்தில் பீட்டா கரோட்டின்கள் அதிகம் உள்ளதால் கண் நோய்களை குணமாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இதில் உயர்தர பொட்டாசியம் உள்ளதால் சிறுநீரக கற்களை குணப்படுத்துகிறது. இந்த பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது,  ஆண்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் காணப்படுகிறது. மேலும் 50 சதவீத நார்ச்சத்து கொண்ட இந்த பழம் பல் வலி, பல்லசைவு போன்ற பல வியாதிகளை நீக்குவதுடன், 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது பல் தொடர்புடைய நோய்கள் அனைத்தும் குணமாகும் கூடிய வாய்ப்புகளை உருவாக்குகிறது.

மேலும் உடலில் ஏற்படக்கூடிய சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு சிறந்த நிவாரணம் தருவதுடன் ஆண்மைக் குறைபாட்டை நீக்கி நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப் பட்டவர்களுக்கு பூரண சுகம் அளிக்கிறது. தொற்று நோய் ஏற்படக்கூடிய நிலையை மாற்றி, அஜீரணக் கோளாறுகளை நீக்கி, மலச்சிக்கலைப் போக்க உதவி செய்கிறது. மேலும் மூல நோய் உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டு வரும்பொழுது விரைவில் அதிலிருந்து விடுபடலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், சிறுநீர் கோளாறுகள் ஆகியவற்றை நீக்குவதோடு கண் பார்வைக்கு மிகுந்த பயன் அளிப்பதாகவும் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்