லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம் – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
விவசாயிகளிடம் அதிகாரிகள் லஞ்சம் கேட்பது பிச்சை எடுப்பதற்கு சமம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சூர்யா பிரகாஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.அவரது வழக்கில்,தமிழகம் முழுவதும் விவசாயிகள் நெல் கொள்முதல் செய்ய போதுமான நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும்,விவசாயிகளிடம் இருந்து விரைவாக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் .மேலும் விவசாயிகள் கொண்டுவரும் நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.40 லஞ்சமாக அதிகாரிகள் வாங்குவதாகவும் என்று தெரிவித்தார்.
விவசாயிகளிடம் அதிகாரிகள் லஞ்சம் கேட்பது பிச்சை எடுப்பதற்கு சமம் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. தமிழகத்தில் எத்தனை நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளது ? என்றும் அதிகாரிகள் லஞ்சம் பெறுவது குறித்தும் , தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் நாளை பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்து வழக்கினை ஒத்திவைத்து நீதிமன்றம்.