#BREAKING: தவறைத் தவிர்த்திருக்கலாம் , அனுபவமே பாடம் – ரஜினிகாந்த் ட்வீட்

Default Image

சொத்து வரி விவகாரத்தில் தவறைத் தவிர்த்திருக்கலாம் என்று ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார். 

ரஜினிகாந்த் அவர்களின் திருமண மண்டபம் ஆனது கடந்த சில மாதங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக திறக்கப்படவில்லை. ஆனால் பொதுமுடக்கம் காலத்தில் பயன்படுத்த முடியாமல் அடைக்கப்பட்டிருந்த திருமண மண்டபத்திற்கு ரூ.6.50 லட்சம் சொத்து வரி விதிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த சொத்து வரியை ரத்து செய்ய உத்தரவிடுமாறு  ரஜினிகாந்த் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்  செய்யப்பட்டது.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.இந்த மனுவை விசாரித்த  நீதிமன்றம் , நோட்டிஸ் அனுப்பிய 10 நாட்களில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதாகவும், அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாக நீதிமன்றம்  எச்சரிக்கை விடுத்தது .இதனால் சொத்து வரிக்கு எதிரான வழக்கை ரஜினி தரப்பில்  திரும்பப்பெறுவதாக தெரிவிக்கப்பட்டது.பின்னர் வழக்கு தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், ராகவேந்திரா மண்டப சொத்து வரி.நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறைத் தவிர்த்திருக்கலாம்.அனுபவமே_பாடம் என்று பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்