#Breaking: தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்!
தமிழ்நாட்டில் 174 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னி பேருந்துகள், வரும் 16 ஆம் தேதி முதல் இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பேருந்து போக்குவரத்துக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், 4 ஆம் கட்ட பொதுமுடக்க தளர்வுகளில் அரசு பேருந்துகள் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், இ-பாஸ் நடைமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆம்னி பேருந்துகள் ஓடவில்லை.
இதனால் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம், பேருந்துகளை இயக்க அனுமதிக்குமாறு அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் ஆம்னி பேருந்துகள் இயங்கும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது. அதன்படி முதற்கட்டமாக 500 பேருந்துகளை இயக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.