#BREAKING: ஒரு வருடத்திற்கு பிறகு மெகபூபா முஃப்தி விடுவிப்பு..!
காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பிரிக்கப்பட்டது. இதனால், இந்த விதமான அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க அந்த மாநில முக்கிய தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக காவலில் இருந்த ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான மெஹபூபா முப்தி விடுவிக்கப்பட்டுள்ளார் என்று ஜே-கே நிர்வாக செய்தித் தொடர்பாளர் ரோஹித் கன்சால் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு இருந்த பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.