பொறாமைக்காரர்கள் விஷம் கக்குகிறார்கள்! கடுப்பான நடிகை சஹானா! எதற்காக தெரியுமா?

Default Image

நடிகை நஸ்ரியா வாங்கியுள்ள ரூ.2 கோடி மதிப்புள்ள கார். 

நடிகை நஸ்ரியா தமிழ் சினிமாவில், நேரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துள்ளார். நடிகை நஸ்ரியா கடந்த 2014-ல் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, இவர்கள் ரூ.2 கோடி மதிப்புள்ள ‘போர்ஷே 911’ என்ற சொகுசு  காரை வாங்கிய நிலையில், அதனை இணையத்திலும் வெளியிட்டனர்.

இந்நிலையில், பலரும் இதற்கு வாழ்த்து தெரிவித்த நிலையில், சிலர், கொரோனா தொற்றினால் மக்கள் கஷ்டப்படும் நேரத்தில், யூனலுக்கு ரூ.2 கோடி கார் தேவையா? அந்த பணத்தை கஷ்டப்படும் ஏழைகளுக்கு கொடுத்து இருக்கலாமே என தெரிவித்துள்ளனர்.

இதனை பார்த்த நடிகை சஹானா, இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘பொறாமைக்காரர்கள் விஷம் கக்குகிறார்கள். அடுத்தவர்கள் வாழ்க்கையில் நன்மை நடந்தால் பொறாமைப்படுகின்றனர். மற்றவர்களுக்காக மகிழ்ச்சியை வெளிப்படுத்துங்கள்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்