மும்பை மின் தடை: 15 மணி நேரத்திற்கு பின் சில பகுதிகளில் மீண்டும் மின் விநியோகம்!

Default Image

15 மணிநேர மின் தடைக்கு பின், நவி மும்பை மற்றும் தானே பகுதிகளில் மின்சாரம் வழங்கப்பட்டது.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான ஜூகு, அந்தேரி, நவி மும்பை, பான்வெல், தானே உள்ளிட்ட பகுதிகளுக்கு கல்வா பகுதியில் உள்ள டாடா நிறுவனத்தின் மின்வாரிய நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பல இடங்களில் மின்சாரம் தடைசெய்யப்பட்டது.

இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானர். மேலும், மின் தடை காரணமாக பாதி வழியிலே பல ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ரயில் பயணிகளும் அவதிக்குள்ளாயினர். அதனைதொடர்ந்து போக்குவரத்துக்கு சிக்னல்களும், அடுக்குமாடி மற்றும் மருத்துவமனைகளில் உள்ள லிப்டுகளும் இயங்காத காரணத்தினால் மும்பை மக்கள் அனைவரும் கடும் அவதிக்குள்ளாகினர்.

மும்பையில் ஏற்பட்ட மின்தடை குறித்து மத்திய எரிசக்தி மற்றும் இணையமைச்சர் ஆர்.கே சிங் தெரிவித்ததாவது, மின்சார விநியோகம் விரைவில் சரிசெய்யப்படும் எனவும், தேசிய மின் விநியோக அமைப்பு நன்றாக உள்ளதாகவும், மாநில அமைப்பின் தான் சில கோளாறு உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தநிலையில், மின் தடை ஏற்பட்ட 15 மணி நேரத்திற்குப் பிறகு, செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் நவி மும்பை மற்றும் தானே ஆகிய பகுதிகளில் மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் மற்ற பகுதிகளுக்கு இன்னும் மின் வசதி கிடைக்கவில்லை என பலரும் தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்