விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக மாற்ற அரசு முயற்சி – பிரதமர் மோடி

Default Image

மத்திய அரசு விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக மாற்ற தொடர்ந்து முயற்சித்து வருகின்றது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பில் பிரதமர் கிசான் திட்டம் மூலம் ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படும் என 2018-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த ரூ.6000 மூன்று தவணையாக ரூ.2000 என வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.அதன்படி விவசாயிகள் வருவாய்த் துறையிடம் தங்கள் நிலத்திற்கான பட்டா சிட்டா சான்றிதழ் வாங்கிக்கொண்டு வேளாண்மை துறை அலுவலகத்தில் விண்ணப்பித்து இந்த உதவித்தொகையை பெற்று வந்தனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் பாலா சாஹேப் விக்கே பாட்டீலின் சுய சரிதையை இன்று வெளியிட்டார்.அப்பொழுது அவர் பேசுகையில்,இதுவரை 1 லட்சம் கோடி ரூபாய்  கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.மத்திய அரசு விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக மாற்ற தொடர்ந்து முயற்சித்து வருகின்றது. கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஏற்படும் சிறிய செலவுகளுக்காக கூட மற்றவர்களிடம் வாங்கும் நிலைமாற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்