நாட்டு மக்களைப்பார்த்து கண்கலங்கிய வடகொரிய அதிபர்..!

Default Image

கடந்த சனிக்கிழமை வடகொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் 75-வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, இராணு அணி வகுப்பு நடைபெற்றது. இந்த இராணுவ அணி வகுப்பு நிகழ்ச்சியில் பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்,  நாட்டு மக்கள் வானத்தை விட உயரமாகவும், கடல் போன்று ஆழமாகவும் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

நான் உங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை, இதற்காக மிகவும் வருந்துகிறேன். வெள்ள பாதிப்பிலிருந்து மக்களை மீட்கவும், கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காகவும் ராணுவத்தினருக்கு நன்றி தெரிவித்தார். மேலும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தவறிவிட்டதாக கூறி நாட்டு மக்களைப்பார்த்து கிம் ஜாங் உன் கண்ணீர் விட்டார்.

இந்த நாட்டை வழிநடத்திய தந்தை மற்றும் தாத்தாவிற்கு பின் இந்த நாட்டை வழி நடத்தும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்