25,000 பேர் இருந்தால் தான் அரசியல் கட்சி தொடங்க அனுமதி வழங்க வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை

Default Image

25,000 பேர் இருந்தால் தான் அரசியல் கட்சி தொடங்க அனுமதி  வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. 

ஆக்ஸிஜன் சிலிண்டர் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தஞ்சையை சேர்ந்த தமிழ் தேசிய கட்சி பொதுச் செயலாளர் தமிழ் நேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ,அங்கீகரிக்கப்படாத லெட்டர் பேடு அரசியல் கட்சிகள் பணம் பறிக்கும் நோக்கத்துடன் செயல்படுகின்றன என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

குறைந்தபட்சம் 25,000 உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே அரசியல் கட்சி தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் புதிய அரசியல் கட்சி தொடங்க எதன் அடிப்படையில் அனுமதி வழங்கப்படுகிறது? என்று கேள்வி எழுப்பியது நீதிமன்றம.இது குறித்து தேர்தல் ஆணையம், உள்துறை அமைச்சகம் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.மேலும் தமிழ் நேசன் என்பவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்