3 வார கைக்குழந்தையுடன் பணிக்கு வந்த பெண் அதிகாரி! குவியும் பாராட்டுக்கள்!
3 வார கைக்குழந்தையுடன் பணிக்கு வந்த பெண் அதிகாரி.
உத்திரபிரதேசத்தில், ஐஏஎஸ் அதிகாரியான சவுமியா பாண்டே என்பவர், சமீபத்தில் துணை மஜிஸ்திரேட்டாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், கர்ப்பமாக இருந்த சவும்யாவுக்கு பெண்குழந்தை பிறந்தது. இதனையடுத்து, இவர் விடுப்பு எடுக்காமல், தன்னுடைய 3 வாரகால குழந்தையை கையில் ஏந்தியவாறு பணிக்கு திரும்பியுள்ளார்.
சவுமியா அவர்கள், கையில் குழந்தையுடன் கோப்புகளை கையெழுத்திடும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகிற நிலையில், சரியான ஓய்வுக்கு பிறகு பணிக்கு வர வேண்டும் என்றும் அன்பான அறிவுரை வழங்கி வருகின்றனர்.